கிளிநொச்சியில் மக்கள் வெள்ளம்!! வானதிர்ந்த கோசங்கள்!! பதற்றம்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தால், கிளிநொச்சி மாவட்டமே சோகமயமாகியுள்ளது.

கொந்தளித்த மக்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடி, வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீதியில் புரண்டு கதறும் தாய்மாரைப் பார்க்கும் போது, மற்றவர்கள் மனதையும் கரையச் செய்தது.

கண்ணீர் மல்க, கதறியழும் தாய்மார் தமது பிள்ளைகள் எங்கிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துங்கள் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.