ஊடகவியலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல்

யாழ்.கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு செய்தி  சேகரிக்க  சென்ற தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இச் சம்பவம் இன்று நண்பகல் நடந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற வீட்டுக்குள் குறித்த ஊடகவியலாளர் பொலிசார் தடுத்தும் உள்ளே செல்ல முற்பட்ட போதே பொலிசாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரியவருகின்றது.