கீரிமலைக்கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு!!

கீரிமலை கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் ஆணின் சடலம் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.

எனினும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் பின் சடலத்தை மீட்பதற்கான பணிகளை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனா்.  சுமார் 40 வயது மதிக்க முடியும். அரை காற்சட்டை அணிந்தவாறு முகம் கீழ் பார்க்கும் வகையில் சடலம் காணப்படுகிறது. சடலத்தின் அருகே வெளிநாட்டு மதுபோத்தல் ஒன்றும் மீட்கப்பட்டது.