கவுதம் கார்த்திக்கின் முத்துராமலிங்கம் படத்தின் சிறப்பு அம்சங்கள்

கவுதம் கார்த்திக் - கேத்ரீனா தெரசா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் ‘முத்துராமலிங்கம்’. ராஜதுரை என்பவர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இவர் இசையமைக்கும் 1001-வது படம் இதுவாகும். இளைராஜாவின் 1000-மாவது படமான ‘தாரை தப்பட்டை’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்...

1) இப்படத்திற்கு கதாசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என எல்லாத்துறைகளிலும் தனது திறமையை நிரூபித்த பஞ்சு அருணாச்சலம் அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.

2) இந்த படத்தின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இசைஞானி இளையராஜாவும், பஞ்சு அருணாச்சலமும் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்.

3) பஞ்சு அருணாச்சலத்துடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகின்றார்.

4) இந்த படத்தின் மூலமாக மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதும் பெருமையை பெற்றுள்ளார் பஞ்சு அருணாச்சலம்.

‘முத்துராமலிங்கம்’ படத்தை குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.