81 வயதிலும் எள்ளுப் பிடைக்கும் யாழ்ப்பாண ஆச்சி!!

காரைநகர் கோவளத்திற்கு அருகில்உள்ள கிராமமான நாவற்கண்டியில்வசிக்கும் சிவசம்பு வியாலாட்சி (வயது – 81 ) நல்லெண்ணெய் தயரிப்புக்காக எள்ளு பிடைத்துக்கொண்டிருந்தார். நல்லெண்ணை விற்பனையை தமது வாழ்வாதாரத்தொழிலாக மேற்கொண்டுவரும் தனது விதவையான மகளுக்கு வியாலாட்சி (ஆச்சி) பல விதத்திலும் உறுதுணையாக விளங்குகின்றார்.

1937 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஊருக்கேற்ற உரித்தான மிடுக்குடன் இன்றும் பணி செய்வது மிகுந்த பிரமிப்படையவைத்தது. இவரது இந்த பணிக்கு கிராமத்து உணவுப் பழக்கங்களே காரணம் என அவரது உரையாடலில் வெளிப்பட்டது. இவர்களின் நல்லெண்ணையானது பாரம்பரிய முறைப்படி புளியமர செக்கில் அரைக்கப்பட்ட நறுமணம் வீசும் சுத்தமான நல்லெண்ணையாகும்.சுத்தமான கலகலப்பிடமில்ல இவ்வாறானவர்களிடம் இருந்து வாங்கிப் பாவித்து தேக ஆரோக்கியோத்துடன் வாழ்வோம்.

காரைநகர் செல்லும் நண்பர்கள் ஒரு முறை நல்லெண்ணையை வாங்கி

சுவைத்துப் பாருங்கள்..