யாழ் மட்டுவிலில் கொலை வெறி!! குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்!!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சற்று முன்னர் குடல் வெளிவரும் அளவிற்கு சரமாரியாககத்திக் குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த எஸ்.சுவேதன் (24) என்ற இளைஞனே இவ்வாறுகத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கானவர் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உடனடியாக அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.