அராலி பிரதேச வைத்தியசாலையில் இரவு நேரங்களில் வைத்தியர்கள் கடமையாற்றுவதில்லை!

அராலி மேற்கு கோட்டைக்காடு பிரதேச வைத்தியசாலையில் இரவு நேரங்களில் வைத்தியர்கள் கடமையாற்றுவதில்லையெனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அராலி மேற்கு வடக்கு, மத்தி மற்றும் கிழக்கு பகுதி மக்களின் சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் இவ் வைத்தியசாலையில் இரவு நேரங்களில் வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள் ளாவதாகத் தெரிவித்தனர்.

குறித்த வைத்தியசாலையில் நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் காணப்பட்ட போதும் சாரதி இல்லை.பல கட்டட வசதிகளுடன் காணப்படும் குறித்த வைத்தியசாலையில் பகல் வேளைகளில் மாத்திரம் இரு வைத்தியர்கள் கடமையாற்றுவதாகவும்…

அவர்களை சுழற்சி முறையில் இரவு வேளைகளிலும் கடமையாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.