கோயில் சண்டை!!வெளிநாட்டு தமிழன் மீது யாழில் வாள் வெட்டு!! அம்புலன்ஸ் ஏற்றவில்லை!!

வரணி மாசேரியில் இன்று மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பன்னிரண்டு பேர் கொண்ட

கும்பலொன்று வீடு புகுந்து நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் தலையில் பலத்த

வெட்டுக்காயத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஒருவர்.

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்துள்ள வேதாரணியம் ஜெகதீஸ்வரன் (48) என்பவரே

வாள்வெட்டிற்கு இலக்கானார்.

அந்த பகுதியிலுள்ள கோயில் தொடர்பான பிணக்கே வாள்வெட்டில் முடிந்துள்ளதாக

கூறப்படுகிறது. தொலைபேசியில் தொடர்பேற்படுத்தி அச்சுறுத்தி விட்டே வாள்வெட்டு கும்பல்

அங்கு சென்று தாக்குதல் நடத்தியது.

தலையில் இரண்டு பெரிய வெட்டுக்காயங்களிற்குள்ளானார். உடனடியாக அருகிலுள்ள வரணி

வைத்தியசாலைக்கு அவரை கொண்டு சென்று, அங்கிருந்த நோயாளர் காவு வண்டியில் சாவகச்சேரி

ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கோரியபோதும், நோயாளர் காவுவண்டியில் அவரை கொண்டு

செல்ல முடியாதென வைத்தியசாலை நிர்வாகம் கையை விரித்ததாக, வாள்வெட்டிற்கு இலக்கானவரின்

குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பின்னர், முச்சக்கர வண்டியொன்றில் அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கொடிகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.