யாழ் அராலியில் அங்கயன் அந்தர் பல்டி

அராலி யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு முக்கோண வடிவான கிராமமாகும். இது வட்டுக்கோட்டைத் தொகுதியின் அல்லது கோவிற்பற்றின் ஓர் உபபிரிவாகும். அராலியல் தைபொங்கல் நிகழ்வுகள் ஜக்கிய தேசிய கட்சி தீவிர செயற்பாட்டாளர்களாலும் ஆதரவாளர்களாலும் நடாத்தபட்டது. அங்கு சென்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயன் அராலியல் தைபொங்கல் நிகழ்வுகளில்  ஜக்கிய தேசிய கட்சி தீவிர செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜக்கிய தேசிய கட்சி தீவிர ஆதரவாளர்களுடன் அராலியில் தைபொங்கல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு அரசியல் அந்தர் பெர்டி அடித்தார். 

வட்டுக்கோட்டைத் தொகுதியின் அராலியல் தைபொங்கல் நிகழ்வுகள் ஜக்கிய தேசிய கட்சி வட்டுக்கோட்டை பிரதேச இணைப்பாளர் லவகுமார் எனப்படும் லவன் என்பவர் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயன் இராமநாதனை குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டதாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட தகவல்கள் எமக்கு உறுதிப்படுத்தின. 

ஜக்கிய தேசிய கட்சி வட்டுக்கோட்டை பிரதேச இணைப்பாளர் லவகுமார் எனப்படும் லவன் என்பவர் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயன் இராமநாதனிடம் நீண்டகாலமாக மாதந்தோறும் பண உதவிகள் மற்றும் பல்வேறு அரசியல் சலுகைகளை பெற்று வருவதாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட தகவல்கள் எமக்கு உறுதிப்படுத்தின. லவகுமார் மதுபோதைக்கு அடிமையான ஒருவர் என அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் நிர்வாகத்தினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  அராலி ஸ்ரீமுருகன் சனசமூக நிலையம் , அராலி ஆவரம்பிட்டி முத்துமாரி அம்மன் , அராலி நிலாவொளி விளையாட்டுகழகம் அகியன லவகுமாரின் நடவடிக்கைகள்மீது பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்கள் யாழ் குடாநாட்டில் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயன் இராமநாதனை அகற்றுமாரும் அவருக்கு பதிலாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினருமான பிரபல ஊடக ஆசிரியர் கே.ரி.இறாஜசிங்கத்தை நியமிக்குமாறு கோரி வருகின்ற நிலையில் அங்கயன் ஜ.தே.கட்சி பக்கம் தாவிவருவதாக தெரிய வருகிறது. 

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராகப்போகும் சிவில் சமூக தலைவர், தினச்செய்தியின் பிரதம ஆசிரியர் கே.ரி.இராஜசிங்கம்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராகப்போகும் சிவில் சமூக தலைவர், தினச்செய்தியின் பிரதம ஆசிரியர் கே.ரி.இராஜசிங்கம்.