யாழில் காவாலிகளுக்கிடையில் வாள் வெட்டு!! இரண்டு காவாலிகள் படுகாயம்!!(Photos)

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் இரு இளைஞர்கள் மீது வாள் வெட்டு குழு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தைப்பொங்கல் தினமான இன்று நாச்சிமார் கோவிலில் சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த நிலையிர் கோவிலுக்கு அருகில் வைத்து வாள் வெட்டுக்குழுகாவாலிகள் வேறு இரு காவாலிகள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பி சென்றுள்ளது.

தாக்குதலில் இரு காவாலிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த காவாலிகள் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணத் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது

வாள் வெட்டில் காயமடைந்தாலும் காவாலி கைத்தொலைபேசியைக் கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவின் தாக்கம் தற்போது யாழிலிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.