யாழில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நடக்கப் போகும் நன்மை இதோ!!

யாழ் சாவகச்சேரி நகரப் பகுதியில் பூமாரி என்ற பெயருடன் கூடிய மங்கல நிகழ்வுகளுக்காக நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட மண்டபம் ஒன்று எதிர்வரும் 18ம் திகதி திறக்கப்படவுள்ளது. குறித்த மண்டபத் திறப்புவிழாவில், யாழ் மாவட்டத்தில் உள்ள 90 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். ஆகவே குடாநாட்டில் உள்ளவர்கள் தங்களது வயது முதிர்ந்த உறவுகளை குறித்த மண்டபத்துக்கு கொண்டு சென்று முதியவர்களை சிறப்பிக்கும் வண்ணம் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். வயது முதிர்ந்த ஒவ்வொருவருடனும் ஒரு உறவினரே மண்டபத்தில் அனுமதிக்கப்படுவர். அத்துடன் அவர்கள் 90 வயது ஆனவர்கள் என்பதற்கான அத்தாட்சிச் சான்றிதழ்களில் ஏதாவது ஒன்றையும் கொண்டுவருமாறு விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் வருகையை உறுதிப்படுத்துவதற்காக நாளை 15ம் திகதி மற்றும் 16ம் திகதிகளில் 0777768835 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு உங்கள் முதிர்ந்த உறவுகளின் வரவை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.