யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய பெரும் கொள்ளையன் அரியாலையில் சிக்கியது எப்படி?


யாழ்ப்பாண குடாநாட்டில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தார் என்று தேடபட்ட சந்தேகநபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று இரவு
கைது செய்துள்ளனர்.

“யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும் தங்கச்சங்கிலி அறுப்பு போன்றன அண்மைக்காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற இடங்களிலிருந்து சில சிசிரிவி பதிவுகளை வைத்து
சந்தேகநபரைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அரியாலைப் பகுதியில் மறைந்திருந்த சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். உபபொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே அவனைக் கைது செய்தனர்.