யாழில் பக்கத்து வீட்டு அங்கிளுடன் கட்டிலில் மனைவி!! பெற்றோல் ஊற்றிய கணவன்!!

யாழ் சுண்டுக்குழிப் பகுதியில், பக்கத்து வீட்டுக்காரரான 55 வயதான குடும்பஸ்தருடன் படுத்திருந்த மனைவியை, பெற்றோல் ஊற்றி எரிக்க முற்பட்ட கணவனை அயலவர்கள் தடுத்து நிறுத்தியதால் உயிர்ப் பலி தடுக்கப்பட்டது. நேற்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ் புற நகரப்பகுதியில் வர்த்தகநிலையம் ஒன்றை நடாத்திவரும் குடும்பஸ்தரே தனது மனைவியையும் பக்கத்துவீட்டுக்காரனையும் எரிக்க முற்பட்டுள்ளார். மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் தனியாக குறித்த குடும்பஸ்தர் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். பக்கத்துவீட்டுக்காரனுடன் தொடர்பில் இருந்த இரு பிள்ளைகளுக்கு தாயான 35 வயதான மனைவி மகளீர் அமைப்பு ஒன்றில் முக்கிய செயற்பாட்டாளராக விளங்கி வருகின்றார். நேற்று பிற்பகல் தனது பிள்ளைகளை ரியூசனுக்கு இறக்கிய பின்னர் மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் ரியுசனில் இருந்து தந்தையான வர்த்தகருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. ரியுசனில் விட்ட 9 வயதான மாணவன் திடீர் சுகவீனமாக உள்ளார் எனவும் அவரை வந்து கொண்டு செல்லுமாறும் ரியுசனில் இருந்து தந்தைக்கு தொலைபேசியில் சொல்லியுள்ளார்கள் உடனடியான வர்த்தக நிலையத்திலிருந்து ரியுசனு்ககு விரைந்து வந்த தந்தை தனது மகனையும் ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு விரைந்துள்ளார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடை வைத்துள்ளது.

அரை குறை ஆடையுடன் மனைவி பதற்றமாக அறையை விட்டு வெளியே வந்துள்ளார். கணவன் சந்தேகமடைந்து அறைக்குள் பார்த்த போது மனைவியின் மேலாடையும் ஆண் ஒருவரின் லுங்கியும் கட்டிலின் மேல் காணப்பட்டுள்ளது. கணவன் கட்டிலின் கீழ் பார்த்த போது பக்கத்துவீட்டு அங்கிள் நிர்வாண நிலையில் அகப்பட்டுள்ளார். உடனடியாக கணவன் தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கியதுடன் கட்டிலின் கீ்ழ் இருந்த பக்கத்துவீட்டுக்காரனையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன் மனைவியையும் அந்த அறை்க்குள் வைத்து தள்ளி அறையைப் பூட்டிய பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை எடுத்து அறைக்குள் ஊற்ற முற்பட்டுள்ளார். சுகவீனமடைந்திருந்த மகன் இவற்றைப் பார்த்து பெரிதாக குக்குரல் இட்டு கத்தியதால் பக்கத்துவீட்டுக்காரனின் மனைவி மற்றும் பிள்ளைகளும் வேறு அயலவர்களும் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் இருந்து தான் எடுத்த பெற்றோலை கணவன் மூடிய அறைக்குள் ஊற்றிய போது என்ன நடக்கின்றது என அறியாத அயலவர்கள் அவரை தடுத்து நிறுத்திய பின்னர் அறையைத் திறந்துள்ளார்கள் அதன் பின்னர் அனைத்து விடயமும் அவர்களுக்கு வெளிச்சமாகியுள்ளது.

பக்கத்துவீட்டுக்காரனின் மனைவி உடனடியாக தனது கணவன் மீது சமாரியான தாக்குதலை தொடுத்ததாகவும் தெரியவருகின்றது. வர்த்தகர் மற்றும் மனைவியின் தாக்குதலில் தலை மற்றும் முகத்தி்ல கடுமையாக இரத்தக்காயத்துடன் பக்கத்துவீட்டுக்காரன் தனது வீட்டுக்குள் ஓடிச் சென்று அறையைப் பூட்டியுள்ளார். அவர் தற்கொலை செய்யப் போகின்றார் என நினைத்து அயலவர்கள் அவரது கதவை உடைத்து அவரை மீட்டதாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவங்களையடுத்து இன்றும் இரு வீட்டிலும் அடிபிடிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

பக்கத்துவீட்டுக்காரனான 55 வயது குடும்பஸ்தர் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் எனவும் தனது வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு ஒரு முறையே வந்து செல்வதாகவும் தெரியவருகின்றது. இவருக்கு பிரபல பாடசாலையில் உயர்தரத்தில் கல்விகற்கும் இரு பெண்பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.