திங்கட்கிழமை வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விடுமுறை!! ஆளுநர் அறிவிப்பு!!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கின் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை

உழவர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாண
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த சிறப்பு விடுமுறைக்கான கட்டளையை
கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான தைப் பொங்கலை
முன்னிட்டு 14ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கு
விடுமுறையினை வழங்குவதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள்
வழங்கியுள்ளார்.

இந்த விடுமுறைக்கான மாற்றுப் பாடசாலை தினம் பின்னர் அறிவிக்கப்படும் – என்றுள்ளது.