டிக்கெட்டா? எனக்கா? கலர் ஜெராக்சில் கலக்கிய அஜித் ரசிகர்கள்

அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் ரசிகர்கள் சிலர் கலர் ஜெராக்ஸை கொடுத்துவிட்டு படத்தை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒன்றரை வருடங்களாக அஜித்தை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்கள் இன்று இந்த படத்தை பார்த்து ரசித்தனர். பல்வேறு தரப்பினர் இந்த படத்தை புகழ்ந்து வருகின்றனர்.

இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர் முன்பு ஈக்கூட்டம் போல் மொய்க்கத் தொடங்கினர். சிலருக்கு டிக்கெட் கிடைத்தாலும் பலருக்கு டிக்கெட் கிடைக்காமல் தவித்து வந்தனர். 

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த  அஜித் ரசிகர்கள் சிலர், விஸ்வாசம் படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து படம் பார்க்க சென்றுள்ளனர்.

தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்த்த பின்பு தான், ரசிகர்களின் இந்த பிராடு வேலை தியேட்டர் நிர்வாகத்திற்கு தெரியவந்தது. பின்னர் அடுத்த காட்சிகளில் டிக்கெட்டை நன்கு பரிசோதித்த பிறகே ரசிகர்கள் படத்தை பார்க்க தியேட்டருக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.