யாழில் கையும்களவுமாக சிக்கிய இரு இளைஞர்கள் !

5000 ரூபா கள்ள நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாண மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை யாழ் கைதடிச் சந்தியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவினைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு 5000 ரூபா பெறுமதியுடைய 20 கள்ள நாணயத்தாள்களை வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட வேளையில் புலனாய்வு பிரிவு உத்தியோத்தர்களினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது