யாழில் எம்.ஐி. ஆரின் 99 ஆவது பிறந்த தின நிகழ்வு அனுஷ்டிப்பு

இந்திய முன்னாள் நடிகரும், மறைந்த எம்.ஐி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) 99 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இன்று யாழ்.கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள (எம்.ஐி.ஆர்) சிலைக்கு முன்பாக நடைபெற்றது. யாழ் கல்வியங்காடு பகுதில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்கத் தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்க தலைவர் ரவி ஆகியோரும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். யாழ் கல்வியங்காடு பகுதில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் சிலை, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான சுந்தரலிங்கம் தனது சொந்த நிதியில் நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.