யாழ் இந்துக்கல்லுாரி மாணவர்கள் போதைப் பொருள் பாவிப்பவர்கள்!! யாழ் மாநகரசபை பிரதி மேயர்!!

யாழ் இந்துக்கல்லுாரி மாணவர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் என்று மிகத் துணிவாக கூறியுள்ளார் யாழ் மாநகரசபையின் பிரதிமேயர் ஈசன். இது தொடர்பாக யாழ் இந்துக்கல்லுாரி மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள் அதிர்ந்து போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. இருப்பினும் செல்வம் அடைக்கலநாதனை தலையாகக் கொண்ட ரெலோவின் கட்சியில் போட்டியிட்ட ஈசன் யாழ் மாநகரசபையில் உள்ள தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட்டு நுாற்றுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தார். கிட்டத்தட்ட சாதாரண ஒரு நபரின் கலியாணவீட்டுக்குக் கூடுகின்ற உறவுகளின் ஆதரவு போல் ஈசனும் அப்பகுதி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருந்தார். கூட்டமைப்புக்குள் இருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரிலும் பார்க்க கூடுதலான வாக்குகள் பெற்றவர்களை எல்லாம் விடுத்து ரெலோ கட்சி சார்பாக ஈசனை பிரதி முதல்வராக கூட்டமைப்பு தெரிவு செய்தது.

இதே வேளை சங்கக்கடையில் வேலை செய்த ஈசன் பிரதிமுதல்வராக இருக்கும் யாழ் மாநகரசபையில் யாழ் இந்துக்கல்லுாரியைச் சேர்ந்த இருவரும் யாழ் மாநகரசபையில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். யாழ் இந்து பழைய மாணவனாகிய அருள்குமரன் ஈசன் பிரதிமேயராக பணியாற்றும் அதே கட்சியில் உறுப்பினராக இருக்கின்றார். அதுவும் ஈசனை விட அருள்குமரன் அதிக அளவு வாக்குப்பலத்துடன் வெற்றிபெற்றவர்.  அதை விட சைக்கிள் கட்சியில் உறுப்பினராக இருந்த மணிவண்ணனும் யாழ் இந்துவின் பழையமாணவனாவார். குறித்த சபையில் அவரும் உறுப்பினராக இருக்கின்றார்.

அத்துடன் யாழ் மாநகரசபை ஆணையாளரும் யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் ஈசன் அவர்கள் இவ்வாறு துணிச்சலாக யாழ் இந்து மாணவர்களைப் பற்றி கூறியுள்ளதற்கு பெருமளவு ஆதாரங்கள் அவர்வசம் இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ஆகவே யாழ் இந்துக்கல்லுாரி மாணவர்கள் இந்த விடயத்தில் ஈசன் கூறியதைக் கேட்டு அடங்கிப் போவார்கள் என்றே யாழ்ப்பாண மாணவர்கள் தரப்பில் கருதப்படுகின்றது.

இதே வேளை யாழ் இந்து மாணவர்கள் போதைப்பொருள் பாவிக்கின்றார்கள் என்ற உண்மையை வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் போட்டுடைத்த ஈசன் அவர்கள்  குறித்த மாணவர்களுக்கு போதைப்பொருட்களைக் கொடுப்பவர்கள் யார் என்பதையும் கண்டு பிடித்தல் அவசியம். ஏனெனின் ஈசனின் கட்சி தலைமையான செல்வம் அடைக்கலநாதன் அவர்களை போதைப்பொருள் விநியோகிப்பவர் என்றே பெருமளவு மக்கள் தற்போதும் கருதுவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.