கிளிநொச்சியை நோக்கி பறந்தார் ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சியை நோக்கி பயணமாகியுள்ளனர்.

வடக்கில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை பார்வையிடும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு பயணமாகியுள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் அநுராதபுரத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.