அம்பாறையில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்! பின்னணி தகவல்

அம்பாறை , திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 03 கள்ளீயந்தீவு இராணுவ முகாமைமினை அகற்ற வேண்டாம் என கோரி முகாமைச் சுற்றியுள்ள அப்பகுதி பொது மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்து இருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது இராணுவ முகாமிற்கு முன்பாக இடம்பெற்றதுடன் சுமார் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு இராணுவ முகாம் அகற்றுவதற்கு எதிராக சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றப் பொறுப்பதிகாரி எஸ்.வி.எம்.சஹாத் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்தரையாடியதுடன் இவ் விடயம் தொடர்பாக எழுத்த மூலமான கடிதம் ஒன்றினை தமக்கு வழங்குமாறு தெரிவித்து சென்றிருந்தார்.

இதனையடுத்து ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இராணுவ முகாமை அகற்றுவதனால் தமக்கு போதைப் பொருள் பாவனையாளர்களினால் அச்சுறுத்தல் எற்படும் என்றும் இவ் முகாம் இருப்பதனால் பிரதேசத்தில் திடிர் அனர்த்தங்கள் ஏற்படும் இடத்து இராணுவம் விரைந்து வந்து பொது மக்களை காப்பாற்றும் நடவடிகளை கடந்த காலங்களில் எடுத்ததாகவும் இராணுவம் இவ்விடத்தினை விட்டு போகுமிடத்து தமக்கு பாதுகாப்பு இல்லையென்றும் தெரிவித்து மகஜர் ஒன்றினை கோமாரி 242வது விக்கெட் கொமாட்டோ விரிக்கேடியர் எச்.ஜீ.டீ.ரணசிங்க அவர்களிடம் கையளித்திருந்ததுடன் ஊடகங்களுக்கு இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் என்ற கருத்தினையும் தெரிவித்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கோமாரி 242வது விக்கெட் கொமாட்டோ விரிக்கேடியர் எச்.ஜீ.டீ.ரணசிங்க இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என பொது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததோடு தனக்கு மகஜர் ஒன்றினை வழங்கியுள்ளனர் இதனை மேல் நிலை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க எற்பாடுகள் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்காணியில் 1990ஆம் காலப் பகுதியில் கள்ளீயந்தீவு அ.த.க.பாடசாலை எனும் பெயரில் தற்போதய விஸ்வதுளசி அ.த.க. பாடசாலை இயங்கி வந்த நிலையில் அப்பாடசாலை பிரதான வீதியருகில் தற்போது இயங்கி வருகின்றது.

இந்நிலையில் இவ் இராணுவ முகாம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களுடன் கலந்தரையாடி தம்பட்டை சென்ஜோன், ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் ஆகிய பாடசாலைகள் உட்பட திருக்கோவில் விஸ்வதுளசி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளின் காணிகளையும் விளையாட்டு மைதானம் மற்றும் பாடசாலைகளின் தேவைகளுக்காக பெற்றுக் கொடுப்பதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் இராணுவ முகாம் நாளை புதன்கிழமை 26ஆம் திகதி முகாம் அகற்றுவதற்கான திகதி குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.