சாவகச்சேரி ஆதர வைத்திய சாலை இயங்கி வருகிறதா?

சாவகச்சேரி ஆதர வைத்திய சாலை சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருவதாக வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வைத்திய சாலை சூழல்கள் மற்றும் நோயாளர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெறும் விடுதிகள் என்பனவே சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக விடுதியின் மலசல கூடங்கள் , குளியலறைகள் நோயார்களின் சாப்பாட்டு அறை என்பன சுகாதரமற்ற முறையில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கபப்டவில்லை என நோயாளர்கள் தெரிவின்றனர். சுகாதார தொழிலாளிகள் விடுதிகள் விடுதி மலசல கூடங்கள் குளியலறைகள் மற்றும் சாப்பாட்டு அறைகள் என்பவற்றை உரிய முறையில் சுத்தம் செய்வது இல்லை எனவும் சில வேளைகளில் நோயாளர்களே அவற்றை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் எடுக்க வேண்டும் என நோயாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்க ப்பட்டு உள்ளது.