சாவகச்சேரியில் சட்டவிரோத கசிப்பு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் புலனாய்வு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் சட்டவிரோத கசிப்பு வியாபாரம் இடம்பெறுவதாக தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 6 போத்தல் கசிப்பும், கசிப்பு தயாரிக்க பயன்படும் கோடா 27 போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபரிற்கு எதிராக ஏற்கனவே சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாகவும் யாழ். புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.