வலி.வடக்கு பிர­தே­சத்தில் பார்த்தீனிய செடிகளை அகற்றுக

வலி.வடக்கு பிர­தே­சத்தில் அரச நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான காணியில் பெருந்­தொ­கை­யான பார்த்­தீ­னியச் செடிகள் அடர்ந்து பற்­றைக்­கா­டுகள் போல் காணப்­ப­டு­கின்­றமை குறித்து விசனம் தெரி­வித்­துள்ள அப்­ப­குதி பொது­மக்கள் இச்­செ­டிகள் மேலும் வேறு இடங்­க­ளுக்குப் பர­வாமல் தடுக்கும் வகையில் உட­ன­டி­யாக அகற்­று­வ­தற்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் முன்­வ­ர­வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்ளனர். 

வலி.வடக்கு பிர­தே­சத்தில் காங்­கே­சன்­துறை வீதி­யி­லி­ருந்து கட்­டு­வ­னுக்குச் செல்லும் கோயிற்­புல வீதியில் இருக்கும் வலி.வடக்கு பிர­தேச செய­ல­கத்­திற்குச் சொந்­த­மான காணியில் பார்த்­தீ­னியச் செடிகள் பற்­றைக்­கா­டுபோல் வளர்ந்­துள்­ளன.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய இச்­செ­டிகள் வளர்ந்­தி­ருப்­பது குறித்து அதி­கா­ரிகள் உரிய கவனம் எடுத்து செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரியுள்ளனர்.