தெருவில் சங்கிலி அறுத்த கள்ளன் இளைஞர்களால் துரத்திப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கபட்டான்

மானிப்பாய், டச்சுவீதி பகுதியில் சனிக்கிழமை (16) பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்தெடுத்த ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப்பிடித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கட்டுவன் பகுதியைச்  சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வேறு நகைப்பறிப்பு சம்பவங்களுடனும் தொடர்பு உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவருடன்; தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் தேடி மானிப்பாய் பொலிஸாhர் தேடி வலைவிரித்துள்ளனர்.