காதலும் கடந்து போகும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி நடிப்பில் 'சேதுபதி', தர்மதுரை' 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இப்படங்கள் பிப்ரவரி மாதத்தில் அடுத்தடுத்து ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது 'காதலும் கடந்து போகும்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படம் காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 12ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலுடன் கூடிய திரில் படமான இப்படம் காதலர் தினத்தில் வெளியாவது பொருத்தமானதாக இருக்கும் என்று படக்குழுவினர் நினைத்திருக்கின்றனர். அதனால், பிப்ரவரி 12ம் தேதியை தேர்வு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நலன்குமாரசாமி இயக்கியுள்ள இந்த படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்று வருகிறது.