தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

தனுஷ் தனது ‘வுண்டார்பார் பிலிம்ஸ்’ நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். இவருடைய நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களும் வசூலிலும், ரசிகர்கள் மத்தியிலும் வெற்றியை தேடித் தந்துள்ளன.

கடந்த வருடம் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த ‘காக்கா முட்டை’, ‘நானும் ரௌடிதான்’, ‘தங்கமகன்’ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த வருடத்தில் தனது நிறுவனத்தின் முதல் கணக்காக ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் படம் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அமலாபால் ஹீரோயினாக நடிக்கிறார். சமுத்திரகனி, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அஸ்வினி ஐயர் என்ற பெண் இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். தான் தயாரிக்கும் படத்தை இளையராஜா இசையமைப்பதை பெருமையாக கருதுவதாக தனுஷ் கூறியிருக்கிறார்.

இந்தியில் வெற்றி பெற்ற ‘நில் பட்டே சன்னாட்டா’ என்ற படம் தமிழில் ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.