யாழில் பெண்னொருவர் சேலை அணிந்து வந்ததால் நீதிமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பு

புத்­த­ரின் உரு­வப் படம் கொண்ட சேலையை மல்­லா­கம் நீதி­மன்­றில் பணி­யாற்­றும் பெண் ஒரு­வர் அணிந்து வந்­த­தால் அங்கு சிறிது நேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

அவர் சிற்­றுண்­டிச் சாலைக்­குச் சென்ற போது அங்கு கட­மை­யில் இருந்த் பொலி­ஸார் அதை அவ­தா­னித்து அவரை ஒளிப்­ப­டம் எடுத்­த­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது.

அங்­கி­ருந்த சட்­டத்­த­ரணி அந்­தப் பெண்­ணுக்கு அது தொடர்­பில் விளக்­க­ம­ளித்­த­தும் அவர் உட­ன­டி­யாக வீடு சென்று சேலையை மாற்றி வந்­தார் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதே­வேளை, யாழ்ப்­பா­ணம் நீதி­மன்­றில் நேற்­று­முன்­தி­னம் இது­போன்ற சம்­ப­வம் ஒன்று நடந்­தி­ருந்­தது.</p><p>நீதி­மன்று சென்ற பொலி­ஸார் பெண் சட்­டத்­த­ரணி ஒரு­வர் புத்­த­ரின் உரு­வப் படம் கொண்ட சேலையை அணிந்­துள்­ளார் என்­றும் அவ­ரைக் கைது செய்ய வேண்­டும் என்­றும் கோரி­யி­ருந்­த­னர். அத­னால் அங்கு பர­ப­ரப்பு ஏற்­பட்­டி­ருந்­தது.