சட்ட முதுமாணிப் பரீட்சை பெறுபேறு!! வடக்கு, கிழக்கில் 5 நீதிபதிகள் சித்தி!!

வடக்கு ,கிழக்கில் கடமையாற்றும் 5 தமிழ் நீதிபதிகள்  சித்தியடைந்துள்ளனர்.

கல்முனை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனீஸ் சாந்தன் சூசைதாஸன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஜே. கஜநிதிபாலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி. சதீஸ்தரன்,ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி அ.ஜூட்சன், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எல்.லெனின்குமார் ஆகிய ஐந்து பேர் நீதித்துறை சார்ந்தவர்களாக உள்ளனர்.

சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி குமார் இரட்ணம் சட்டத்துறை சார்ந்தராக உள்ளார்.

இவர்களுக்கான பட்டமளிப்பு கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவுடன் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.