கொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் விபத்து! ஐவர் படுகாயம்

வவுனியா - கனகராயன்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகி உள்ளது.

கனகராயன்குளத்திற்கு அருகே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குறித்த வான் மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் காரணமாக சுமார் நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக கனகராயன்குளம் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.