வரலாற்று சிறப்புமிக்க குருந்தூர் ஆதிசிவனுக்கும், ஐயனாருக்கும் பொங்கல் வழிபாடு நடத்திய இளைஞர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க குருந்தூர் ஆதிசிவனுக்கும், ஐயனாருக்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் பொங்கி வழிபாடு செய்துள்ளனர்.

முல்லைத்தீவு குமுழமுனை- தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றைய தினம் இந்த பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

குமுழமுனைப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி பொங்கல் பொங்கி, பூசை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

குறித்த மலைப்பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிருவுவதற்காக இரண்டு பௌத்த மத துறவிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து முயற்சித்திருந்த நிலையில் அது அப்பகுதி மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மக்கள் வழிபாடுகளில் ஈடுபட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.