யாழ் இந்து ஆரம்பபாடசாலை மாணவன் , சாவகச்சேரி மாணவி 198 புள்ளிகளுடன் புலமைப் பரீட்சையில் முதலாமிடம்!!

வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் எம்.திகலொளிபவன் மற்றும் சாவகச்சேரி ஆரம்பப் பாடசாலை மாணவி நவஸ்கான் நதி ஆகியோர் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் தமிழ்மொழி மூலம் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..

கொழும்பு பிலியந்தலை சோமவீர சந்திரசிறி வித்தியாலய மாணவன் புமித் மெத்னுல் விதானகே என்ற மாணவன் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்தார். அத்துடன், மினுவாங்கொட ரணதுங்க ஆரம்பப் பாடசாலை மாணவன் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மாணவனுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியான கட்டவுட்கள் வெளியாகின.

வெட்டுப்புள்ளி – யாழ்ப்பாணம் -164

2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று முற்பகல் வெளியிடப்பட்டது.

தற்போது வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் -164,

கிளிநொச்சி 163

மன்னார் 162

கொழும்பு 165

மட்டக்களப்பு 164

வவுனியா 164

முல்லைத்தீவு 163

அம்பாறை 163

திருகோணமலை 162

சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி . நவாஸ்கன் நதி 198 புள்ளிகளைப் பெற்று மாவட்ட நிலையில் முதலிடத்தில் உள்ளார். தேசிய நிலையில் இரண்டாம் இடத்திலும் தமிழ் மொழியில் முதலாம் இடத்தில் உள்ள ஒருவராகவும் உள்ளார் .

சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி . நவாஸ்கன் நதி 198 புள்ளிகளைப் பெற்று மாவட்ட நிலையில் முதலிடத்தில் உள்ளார். தேசிய நிலையில் இரண்டாம் இடத்திலும் தமிழ் மொழியில் முதலாம் இடத்தில் உள்ள ஒருவராகவும் உள்ளார் .