யாழ் வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும்.,

யாழ்ப்பாணம் தென்மராட்சி யாழ் மன்னார் பிரதான வீதியில் தனங்கிளப்பு பகுதியில் தனியார் பேருந்து ஒன்று நேற்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

யாழ்ப்பாணத்தில் இருந்து முழங்காவில் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நடுவீதியில் தடம்புரண்டுள்ளது.

இதில் பேரூந்தின் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்து யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.