யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கஞ்சா மீட்பு

யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று 118 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இருவரும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விசாரணைகளின் பின் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.