யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்தை வழிமறித்த பொலிஸார்

யாழ்ப்பாணத்திலிருந்து, மிகிந்தலை நோக்கி சென்ற நபரொருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள கஞ்சாவினை கடத்தி சென்ற குற்றச்சாட்டிலேயே நேற்றிரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழில் இருந்து மிகிந்தலைக்கு பயணித்த பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அந்த பேருந்தில் பயணித்த மிகிந்தலையை சேர்ந்த அன்வர்தீன் பாரித் என்ற நபர் 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.