பாடலாசிரியர் தாமரைக்கு நன்றி கூறிய கார்த்தி...

கார்த்தி நடிப்பில் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ள படம் "தேவ்" இந்த படத்தில்  நடிகை ரகுல் பிரித் சிங்  கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

இதில் ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல்முறையாக  கார்த்தி  படத்திற்கு  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "ஒருநூறுமுறை " என்ற பாடலை தாமரை எழுதியுள்ளார். இந்த பாடலை கேட்ட நடிகர் கார்த்தி அவரது டுவிட்டரில், இது மிகவும் அழகான பாடல் எனவும் அதற்கு நன்றி தெரிவித்தும் பாராட்டியுள்ளார்.