ஜெயம் ரவி படத்தின் புதிய அப்டேட்

ஜெயம் ரவி டிக் டிக் டிக் படத்திற்கு அடுத்து தற்போது நடித்திருக்கும் அடங்கமறு படத்தின் ஆடியோ வெளிய்யிடு வரும் அக்டோபர் 6-ந்தேதி வெளியாகிறது.

நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் தனி ஒருவன் படத்திற்குப் பிறகு அதிகரித்திருப்பதால் அவரை நம்பி பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வரிசையில் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் படம் என விளம்பரபடுத்தப் பட்ட டிக் டிக் டிக் படம் பெரிய பொருட்செலவில் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பையும் பெற்றது. இதற்கிடையில் சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட தயாரிப்பான சங்கமித்ரா படத்திற்காக தன்னை தயார்படுத்தி வந்தார் ஜெயம் ரவி. அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஆனதால் தற்போது ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் அடங்கமறு என்ற படத்தில் சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை எதிர்த்து போராடும் துணிச்சல் மிகுந்த போலீஸாக இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷிக் கண்ணா நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்நிலையில் சாம் சி எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அக்டோபர் 6-ந்தேதி வெளியாகும் என்ற செய்தியை ஜெயம் ரவி தனது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.