முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடரும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள்

முல்லைத்தீவு - புதுமாத்தளன் சாலைப்பகுதி கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சட்டவிரோத கடற்தொழில் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், அத்துமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்திருந்தார்.

அண்மையில் முல்லைத்தீவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தொடர்ந்தும் முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.