செக்க சிவந்த வானம் படத்தால் வந்த வினை - மணிரத்னத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

செக்க சிவந்த வானம் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கும்படி கூறி மர்ம நபர்கள் சிலர் படத்தின் இயக்குனர் மணிரத்னத்திற்கு போனில் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

செக்க சிவந்த வானம் படம் அக்டோபர் 27ம் தேதி வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதிராவ் உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

நீண்ட வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் தனது பழைய பாணியில் செம் ஹிட் படத்தை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

ccv

இந்நிலையில் மணிரத்னத்தின் ஆபிஸுக்கு போன் செய்த மர்ம நபர்கள், செக்க சிவந்த வானம் படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கும்படியும், மீறினால் எங்களது வெடிகுண்டுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸார், போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.