வைக்கம் விஜயலட்சுமிக்கு திருமணம்...

சினிமா உலகம் பார்க்க ரொம்பவே கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அவங்க வாழ்க்கையில் ஜெயிக்கிறதுக்கு அதிகப்படியாக கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள்.

அப்படி ஜெயித்து மேல வந்தவர் தான் பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான  இவர் விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.  இவர்  பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  இவர் மலையாள பட உலகில் அதிகம் பாடல்களை பாடியுள்ளார். 

தனது மெல்லிசை குரலால் ரசிகர்களை கவர்ந்த வைக்கம் விஜலட்சுமிக்கும் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும்  திருமணம் செய்து வைக்க இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர்.

இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் இன்று (10–ந்தேதி) விஜயலட்சுமியின் வீட்டில் நடக்கிறது. திருமணம் அக்டோபர் 22–ந்தேதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடக்கிறது.