சுந்தர். சி இயக்கத்தில் தமன்னா!

சுந்தர். சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் படபிடிப்பே ஆரம்பிக்காத நிலையில் சுந்தர்.சி தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதில் விஷால் மற்றும் தமன்னா மீண்டும்  இணையவுள்ளனர்.

திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, பிரணிதா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் `அட்டரின்டிகி தரேதி’. இந்த படத்தை சுந்தர். சி  ரீமேக் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் சிம்பு ,மேகா ஆகாஷ், குஷ்பு நடிக்க உள்ளனர். இந்நிலையில் இந்த படத்துக்கு  முன்னதாக விஷாலை வைத்து புதிய படத்தை இயக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இது தொடர்பாக தமன்னா கூறுகையில், "சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இந்த படத்தின் மூலம் அது நினைவாகிறது. பாகுபலிக்கு பின்பு மீண்டும் இதில் ஆக்ஷ்ன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் உதயநிதி, தமன்னா நடிப்பில் 'கண்ணே கலைமானே' விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே தமன்னா தெலுங்கில் 4 படங்களை கைவசம்  வைத்துள்ளார்.