சர்கார் சாங் டிராக் லிஸ்ட் அப்டேட்

விஜய் நடிப்பில் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடப்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

ஒருவிரல் புரட்சி மற்றும் சிம்டாங்காரன் என்ற இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிரவலைகளை உண்டாக்கியிருந்தது. இதனால், படத்தில் உள்ள மீத பாடல்கள் மீதும், படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

வரிகளே புரியாத சிம்டாங்காரன் பாடலும் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதற்கடுத்து வந்த ஒருவிரல் புரட்சி பாடல் தற்போதுள்ள அரசியலை சீண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ஒரே நாளில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 


இந்தநிலையில் தற்பொழுது படத்தின் எல்லா பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சிம்டாங்காரன், ஒருவிரல் புரட்சி, டாப்டக்கர், ஒஎம்ஜி பொண்ணு, சிஇஒ இன் தி ஹவுஸ் என மொத்தம் படத்தில் 5 பாடல்கள் உள்ளன. இவை நாளை வெளியாகும்.