பிரபல நடிகரின் அம்மா மரணம்... திரையுலகம் கண்ணீர் அஞ்சலி...

மறைந்த பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூரின் மனைவி கிருஷ்ணா ராஜ்கபூர் (87) முதுமை காரணமாக உடல்நலம் குன்றியிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

மே 1946 ல் ராஜ் கபூரை மணந்த கிருஷ்ணா கபூருக்கு ரன்ந்தீர் கபூர், ரிஷி கபூர், ராஜீவ் கபூர் மகன்களும் ரிது கபூர், ரிமா கபூர் மகள்கள் உள்ளனர். ரன்ந்தீர் கபூரின் மகள்கள் கரீஷ்மா கபூர், கரீனா கபூர். ரிஷி கபூரின் மகன் பிரபல இளம் ஹீரோ ரன்பிர் கபூர்.  இன்று அதிகாலை ரந்தீர் கபூர் தனது  அம்மா  இறந்துவிட்டதாக  ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

கிருஷ்ணா ராஜ்கபூர் மறைவுக்கு ஹிந்தி திரைப்பட உலகினர் தொடர்ந்து  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் உடலுக்கு கரீனா கபூர், கரிஷ்மா, ஆலியா பட் ,  சாஹிப் அலிகான்  உள்ளிட்ட பிரபல நடிகர்கள் தொடர்ந்து  அஞ்சலி செலுத்தி வருகின்றனர் 

கிரிஷ்ணா கபூரின் மறைவால் கபூர் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.