பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தவுடன் விஜயலட்சுமி போட்ட முதல் டுவிட்!

பிக்பாஸ் சீசன் 2-ன் கடைசி சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை விஜயலக்‌ஷ்மி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் டிவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.  இதில்

அதிகப்படியான மக்களின் ஆதரவு மற்றும் ஓட்டுப்போட்டதன் காரணமாக  மெட்ராஸ் புகழ் ரித்விகா டைட்டில் வின்னர்  பட்டத்தை வென்றார். ஐஸ்வர்யா இரண்டாவது இடத்தையும்,  விஜயலட்சுமி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து  வெளியேவந்த விஜயலட்சுமி

வெளியிட்டுள்ள டுவிட்டில் "அன்பான மக்களே....நான் வந்துவிட்டேன்! அன்பு காட்டி ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நான் பல லட்சம் மக்களின் இதயங்களை இப்போது வென்றுவிட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  விரைவில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிடுவேன்" என தெரிவித்துள்ளார்.  அந்த வீடியோவில் பிக்பாஸில் இருந்த அனுபவம் குறித்து ரசிகர்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளப் போகிறாராம். வரும் வாரங்களில் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாக வாய்ப்பு இருக்கிறது.