செக்க சிவந்த அழகிக்கு குவியும் வாய்ப்புகள்!

மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க  செக்க சிவந்த அழகி அதிதி ராவ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படம் மூலம் செக்க சிவந்த அழகால் கிறங்கடித்தவர் அதிதி ராவ்.  இவர் அடுத்ததாக மணிரத்னம்  புதிதாக இயக்கியுள்ள செக்க சிவந்த வானம் படத்தில்  அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து  அதிதி ராவ். மிஸ்கின் இயக்கத்தில்  உதயநிதிக்கு ஜோடியாக சைக்கோ படத்திலும் , தனுஷ் இரண்டாவதாக இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இன்னும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று தனுஷ் படத்தின் ஷுட்டிங் தொடங்கியது. இன்று உதயநிதியின் சைக்கோ படத்தின் ஷுட்டிங் ஆரம்பம் ஆக உள்ளது.