முல்லைத்தீவில் 5 பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட சோகம்! கதறி அழும் பிள்ளைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி காவற்துறையினர் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

இந்துபுரம் திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.