காரைநகரில் சிவன் சிலை அமைப்பதற்கு எதிராக முறைப்பாடு!: பணிகள் இடைநிறுத்தம்

யாழ்.காரைநகர் முகப்பில் நூற்றாண்டு கண்ட காரை சைவ மகா சபையின் செயற்திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட சிவபெருமான் சிலை அமைக்கும் பணி நீண்ட கால இடைவெளியின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் பாலச்சந்திரன் செய்த முறைப்பாட்டையடுத்து சிவன் சிலை அமைக்கும் பணிகளை பொலிஸார் இன்று(30) இடைநிறுத்தியுள்ளனர்.

இதேவேளை, சிவன் சிலை அமைக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். முறைப்பாட்டை மேற்கொண்டவர் உடனடியாக வாபஸ் பெறத் தவறினால் மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் எனப் பல்வேறு தரப்பினரும் எச்சரித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.