வலிகாமத்தில் 4.4 ஏக்கர் காணி இராணுவத்தினரால் மக்களிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் மேற்கு பிரதேச செயலகத்திற்குரிய வலிகாமம் பிரதேசத்தில் 4.4 ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலாளர் என். வேதநாயகனிடம் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியினால் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்த இடங்களில் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் இருந்த 2.75 ஏக்கர் காணி, சண்டிலிப்பாய் பொதுமக்களது 1.19 ஏக்கர் காணி மற்றும் குறும்பச்சிட்டி கூட்டுறவு நிலையம், சமூக நிலையம் காணப்பட்ட 0.5 ஏக்கர் காணி ஆகியன இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது யாழ் பிரதேசத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 200 பேருக்கு இராணுவத்தினரது ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது யாழ் மாவட்ட செயலாளர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோர் இராணுவத்திற்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, தெல்லிப்பளை பிரதேச செயலாளர், யாழ் மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர், 513 மற்றும் 515 ஆவது படைத்தலைமையகத்தின் கட்டளை தளபதிகள் பங்கேற்றனர்.