எனக்கு பாய் பிரெண்ட் யாரும் கிடையாது: த்ரிஷா

விஜய்சேதுபதியுடன் ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கும் படம் 96. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.  

அப்போது  த்ரிஷா கூறியதாவது:ரஜினி சாருடனும், விஜய் சேதுபதியுடனும் நடிக்க வேண்டும் என்கிற என் ஆசை நிறைவேறி விட்டது. அடுத்த ரவுண்டுக்கு நான் தயாராகி விட்டேன்.

பெரிய சூப்பர் ஸ்டார் என்ற எந்த தலைக்கனமும் இல்லாமல் ரஜினி சார் ரொம்பவே எளிமையாக பழகினார். அவரிடம் நான் உங்களுடன் நடிப்பது என் கனவு என்றேன். அதற்கு ரஜினி கலகலவென சிரித்தார்.

96

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தேன். இப்போது வேறு யாரோ நடிப்பதாக சொல்கிறார்கள்.

திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. எனக்கு யாருடனும் காதல் இல்லை. பாய் பிரட்ண்ட் யாரும் கிடையாது என்றார்.