யாழ்.குடாநாட்டு மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளில் இன்று மின்தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(30) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை -05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் கொடிகாமம், கலைவாணி வீதி, வறணி, இயற்றாலை, கரம்பைக் குறிச்சி, கரம்பன், வாளைத் தோட்டம், ஸ்ரான்லி வீதி, மணிக்கூட்டு வீதி, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மின்சார நிலைய வீதி, பருத்தித்துறை வீதியில் ஒரு பகுதி, ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய அலுவலகம், ஸ்ரான்லி வீதியின் பீப்பிள் லீசிங் அன் பினான்ஸ் கம்பனி,ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கி, சிறிநதியா நகை மாளிகை, Raja Talkies, LOLC, ஞானம்ஸ் விடுதி, ரொப்பாஸ், அன்னைநாகா பூட் சிற்றி, வல்லிபுரம், உபய கதிர்காமம், புனிதநகர், கற்கோவளம், மாதனை, நெல்லண்டை, பருத்தித்துறை வெளிச்ச வீடு, சிவப்பிரகாசம் வீதி, 3 ஆம் குறுக்குத் தெரு, நான்காம் குறுக்குத் தெருப் பிரதேசம், பிறவுண் வீதி, அரசடி வீதி, புகையிரதக் கடவையிலிருந்து தட்டாதெருச் சந்தி வரை, லே.கே.எஸ். வீதி, நாச்சிமார் கோவிலிலிருந்து சிவன் கோவில் வரை, நாவலர் வீதியில் ஐந்து சந்தியிலிருந்து இலுப்பையடிச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதிச் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதிச் சந்தி வரை, மானிப்பாய் வீதியில் ஓட்டுமடம் சந்தியிலிருந்து கே.கே. எஸ் வீதி வரை, அசாத் வீதி, வி.ஏ தம்பி லேன், பிரப்பன்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப் புளியடி, கன்னாதிட்டி, மணிக்கூட்டு வீதி, சிவன்பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி, ஹரிகரன் அச்சகம் பிறைவேற் லிமிற்றெட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ரபிறைசஸ் பிறைவேற் லிமிற்றெட், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் பி.எல். சி, கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.