விஜயுடன் மோதும் தனுஷ்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - நடித்துள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

 படத்தில் தனுஷின் அண்ணனாக சசிக்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.  ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் யூடியூப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

film
இயக்குநர் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததாக நேற்று அறிவித்தார்.

அதில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது. தனுஷ், சசிக்குமார் மற்றும் படக்குழுவுக்கு நன்றி என்று மூன்று புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

sasi

அந்தப் புகைப்படத்தில் கௌதமுக்கு சசிக்குமார் கேக் ஊட்டுகிறார். அந்த கேக்கில் ஹேப்பி தீபாவளி 2018 என எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது.

ஏற்கனவே விஜய்யின் 'சர்கார்' தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் இந்த படமும் தீபாவளிக்கு வெளியாவதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.